முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பழிவாங்குவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - சுனில் ஹந்துநெத்தி

27 Aug, 2025 | 02:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களின் ஆட்சியில் சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாட்டு மக்கள் இதனூடான விளங்கிக்கொள்ளலாம் என  கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

மாத்தறையில்  நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பழிவாங்குவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். இதனை எவ்வாறு அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது.

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதனையும் அரசியல் பழிவாங்கல் என்றா குறிப்பிடுவார்கள். 

கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது என்பதை நாட்டு மக்கள் மறக்க கூடாது.

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களின் ஆட்சியில் சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும்.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் வலியுறுத்துகின்ற நிலையில் எதிர்க்கட்சியினர் சட்டத்தின் முன் பாரப்பட்சம் பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். 

பல குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தான் இன்று ஒரு அணிக்கு திரண்டுள்ளார்கள். ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது ஒன்றும் புதிதல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48