வைரத்தில் உருவான விநாயகர் சிலை

Published By: Digital Desk 3

27 Aug, 2025 | 09:25 AM
image

இந்தியாவில் வைரத்தில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு. விநாயகரை வழிபடும் முறை மிகவும் எளிமையானது என்றாலும், மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.

இன்று 27 ஆம் திகதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விரதம்  கடைப்­பி­டிக்­கப்­ப­டுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள், இந்து அமைப்பினர் வழிபாடு நடத்த உள்ளனர். இதையொட்டி விற்பனைக்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வரும் மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் முரகோடா என்ற கலைஞர் வைரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். 

சிலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 இலட்சம் மதிப்பிலான அமெரிக்க வைரத்தில் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகர் சிலையின் எடை 50 கிலோ ஆகும். இந்த விநாயகர் சிலை பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ராமநகரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடபிரபு கெம்பேகவுடா மித்ரா சபை சார்பில் நிறுவப்படுகிறது. பின்னர் அந்த சிலை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம்

2026-08-12 12:15:37
news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05