தொகை­ம­திப்புப் புள்­ளி­வி­பரத் திணைக்­க­ளத்­தினால் தொகுக்­கப்­பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணில் ஏற்­பட்ட மாற்­றங்­க­ளினால் அள­வி­டப்­பட்­ட­வா­றான பண­வீக்கம் ஆண்­டிற்கு ஆண்டு அடிப்ப­டையில் 2017 ஆம் ஆண்டு  மே மாதத்தில் 7.1 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2017 ஜூன் மாதம் 6.3 சத­வீ­தத்­திற்கு குறை­வ­டைந்­துள்­ள­தாக இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

அதன் படி 2017 ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் ஆண்­டிற்கு ஆண்டு பண­வீக்க மாற்­றத்­திற்கு உணவு மற்றும் உண­வல்லா வகைகள் முக்­கி­ய­மாகப் பங்­க­ளித்­தன.

ஆண்டுச் சரா­சரி அடிப்­ப­டையில் அள­வி­டப்­பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணில் ஏற்­பட்ட மாற்றம் 2017 ஆம் ஆண்டு  ஜூனிலும் முன்­னைய மாதத்தில் காணப்­பட்ட அதே மட்­ட­மான 6.1 சத­வீ­தத்தில் மாறாது காணப்­பட்­டது. மாதாந்த மாற்­றத்­தினை கருத்தில் கொள்­ளும்­போது, 2017 ஆம் ஆண்டு   ஜூன் மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச்­சுட்­டெண்­ணா­னது 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் 121.8 சுட்டெண் புள்­ளி­யி­லி­ருந்து 123.4 சுட்டெண் புள்­ளிக்கு அதி­க­ரித்­தது. 

இம்­மா­தாந்த அதி­க­ரிப்­பிற்கு உணவு வகை­யி­லுள்ள பொருட்­களின் விலை­களில் ஏற்­பட்ட அதி­க­ரிப்­புக்­களே முக்­கிய கார­ண­மாக அமைந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மாத காலத்தில் உணவு வகை­யி­லுள்ள காய்­க­றிகள், அரிசி, உடன்மீன், பச்சை மிளகாய், சின்ன வெங்­காயம், கரு­வாடு மற்றும் கோழி என்­ப­ன­வற்றின் விலைகள் அதி­க­ரித்­தன. உண­வல்லா வகையில், தள­பா­டங்கள், வீட்­ட­லகுச் சாத­னங்கள், வழ­மை­யான வீட்டுப் பேணல் (பணி­யாட்கள் கூலி மற்றும் ஓட்­டு­நர்கள் கூலி) பல்­வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் மற்றும்  ஆடை மற்றும் காலணி துணை வகையின் விலைகள் அதி­க­ரித்­தன. 2017 ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் வெறி­யம்சார் குடி­வ­கைகள் மற்றும் புகை­யிலைத் (பாக்கு) துணை வகை­களின் விலை­களும் அதி­க­ரித்­தன. இம்­மாத காலப்­ப­கு­தியில் சுகா­தாரம் துணைத் துறை ஒரு குறை­வினைப் பதி­வு­செ­யத்து. அதே­வேளை, வீட­மைப்பு, நீர், மின் வலு, வாயு, ஏனைய எரி­பொருள் போன்­ற­வற்றின் விலைகள் போக்­கு­வ­ரத்து தொடர்­பூட்டல் பொழு­து­போக்கு மற்றும் கலாச்­சார கல்வி, சிற்­றுண்­டிச்­சாலை மற்றும் சுற்­று­லா­வி­டுதி போன்ற துணைத் துறைகள் மாத காலப்­ப­கு­தியில் மாற்­ற­ம­டை­யாமல் காணப்­பட்­டது.

பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­படைப் பண­வீக்­கத்­தினைப் பிர­தி­ப­லிக்­கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப பண­வீக்கம் ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டையில் 2017 ஆம் ஆண்டு  மே மாதத்தில் 4.7 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2017 ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் 4.1 சத­வீ­தத்­திற்குக் குறை­வ­டைந்து காணப்­பட்­டது. இவ்­வீழ்ச்­சிக்கு ஒப்­பீட்டு ரீதியில் துரி­த­மாக மாறு­கின்ற உணவு, வலு மற்றும் போக்­கு­வ­ரத்துத் துறைகள் உள்­ள­ட­ங்­காத குறைந்­த­ள­வான மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாக அமைந்துள்ளது. 2017 ஜூன் மாதத்தில்  வருடாந்த சராசரி தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் 6.4 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.