எம்மில் சிலருக்கு உட்கார்ந்து பணியாற்றுவதில் பல தருணங்களில் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். இதுபோன்ற தருணங்களில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை தெரிந்து கொள்வதற்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறும் போது தான் வைத்தியர்கள் உங்களுக்கு மருத்துவ மொழியில் பைலோனிடல் சிஸ்ட் எனப்படும் பிரத்யேக நீர்க்கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என விவரிப்பார்கள்.
அது என்ன பைலோனிடல் நீர்க்கட்டி.?
இது பொதுவாக இளம் வயது ஆண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் பாதிப்பாகும். மேலும் இத்தகைய பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற பின்னரும் வைத்தியரின் பரிந்துரையை முழுமையாக பின்பற்றாவிட்டால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இவை பெரும்பாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
பைலோனிடல் நீர்க்கட்டி என்பது பொதுவாக தோலின் வெளிப்புறத்தில் வளர வேண்டிய முடி.. தோலின் உட்பகுதியில் துளையிட்டு வளரத் தொடங்கும்.
இவை உடலில் ஊடுருவிய அந்நிய பொருட்கள் என எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் கருதி இதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வீக்கம்- சீழ்- வலி- போன்றவை உண்டாகும்.
சில தருணங்களில் இவை பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தி மனதளவில் பாதிப்பை உண்டாக்கும். அதே தருணத்தில் இவை பெரும்பாலும் பிட்டத்தின் மேல் பகுதியில் உள்ள அதாவது வால் எலும்பு பகுதிக்கு அருகில் ஏற்படக்கூடும். சிலருக்கு அரிதாக அக்குள் பகுதியிலும் உண்டாகும்.
பொதுவாக வலி, வீக்கம், தோலில் பாதிப்பு, தோலிலிருந்து சீழ் அல்லது ரத்தக் கசிவு, சில தருணங்களில் துர்நாற்றம் ஆகியவை இதன் வெளிப்படையான அறிகுறியாகும்.
மேலும் இறுக்கமான ஆடைகளை அணிவதாலும், முறையான வகையில் அல்லாமல் அசாதாரண முறையில் மிதிவண்டியை இயக்குவதாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலும் ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் போது வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாகவோ அல்லது சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலமாகவோ இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.
வைத்தியர் தீப்தி - தொகுப்பு அனுஷா
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM