செலான் வங்கி அண்மையில் பல்வேறு பிராந்திய அபிவிருத்தி மன்றங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வியாபார (SME) தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியது.
நிதிசார் அறிவை மேம்படுத்துதல், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், மற்றும் SME களின் இயலுமையை பலப்படுத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பானது, இலங்கையின் பொருளாதாரத்தின் அடிக்கல்லாக விளங்கும் SME துறையை வலுவூட்டும் வங்கியின் நோக்கத்தைத் தொடர்ந்தும் செயல்படுத்துகிறது.
ஸ்திரமான ஒரு SME துறையை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டுள்ள அநேகமான நிறுவனங்களுடன் செலான் வங்கி இணைந்து செயற்படுகிறது. இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட “Scale Up” நிகழ்ச்சித்திட்டம் இதன் ஆரம்பமாக அமைந்ததோடு, இந்த நிகழ்வின் வெள்ளி அனுசரணையாளராக செலான் வங்கி பங்குபற்றியது.
இந்த நிகழ்ச்சித்திட்டமானது, டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கான நிதிசார்; தீர்வுகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றிய உள்விடயங்களை பெற்றுத்தந்தது.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்ச்சித்திட்டம் ஏற்றுமதி செயன்முறை குறித்த ஒரு விழிப்புணர்வு கருத்தரங்காக அமைந்தது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் (EDB) இணைந்து SME கள் ஏற்றுமதி தயார்நிலையை கருத்திற்கொண்டு எவ்வாறு தமது செயற்திட்டங்களை மாற்றியமைக்கலாம் என்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
SME துறையின் ஒரு முக்கிய பிரிவாக, பெண் தொழில் முயற்சியாளர்கள் தமது வணிக ஆற்றலை எவ்வாறு விரிவாக்கலாம் என்றும் இந்த முன்னெடுப்பு ஆராய்ந்தது. கம்பஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான நிதி முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தில், பெண் தொழில் முயற்சியாளர்கள் நிலைபேறான வணிக வடிவங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காக முக்கிய நிதி முகாமைத்துவக் கருவிகளுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகளும் ஆராயப்பட்டன.
காலியில் ரோட்டரி கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது, தென் மாகாணத்தில் வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சி, வழிகாட்டல் மற்றும் துறை சார்ந்தோரை தமக்குள் இணைக்கும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாகும்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM