அன்னை தெரசா பிறந்தநாள் : நினைவிடத்தில் பிரார்த்தனை

26 Aug, 2025 | 04:26 PM
image

அன்பால் உலகை வசப்படுத்தி, தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணித்த அன்னை தெரசாவின் 115வது பிறந்தநாள் இன்று.

அல்பேனியா நாட்டின், ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி பிறந்தவர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இயற்பெயர் கொண்ட அன்னை தெரசா.

ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியான இவர், இந்திய குடியுரிமை பெற்று தன் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்தியாவில் கழித்தார். அவருடைய 115வது பிறந்தநாள் இன்று (ஆக. 26) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியில், தெரசாவின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன்போது, கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசோசா தலைமையில், சேரிட்டியின் சிஸ்டர் கிறிஸ்டி உள்ளிட்டோர் தெரசாவின் கல்லறையில் பிரார்த்தனை செய்தனர்.

கொல்கத்தாவில் உள்ள மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி, 1950ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி அன்னை தெரசாவால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டியின் உலகளாவிய தலைமையகமான இங்கு, அகதிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், தொழுநோயாளிகள், வயதானவர்களை கவனித்துக் கொள்கின்றனர்.

மேலும், கைவிடப்பட்ட தெருக் குழந்தைகளுக்கு கற்பிக்கவும், சமூகத் தேவைகளுக்கு ஏற்ப பிற சேவைகளை வழங்கவும் தன்னார்வலர்களால் நடத்தப்படும் பள்ளிகள் உள்ளன.

இந்த சேவைகள், அவர்களின் மதம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44