இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 26 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய முதலாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட்கோலி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

இந்திய அணியின் விபரம் வருமாறு, 

விராட் கோலி ( அணித் தலைவர் ), தவான், முக்குந்த், புஜாரா, ரஹானே, பாண்டியா, விர்திமான் ஷா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமட் சமி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விபரம், ரங்கண ஹேரத் ( அணித் தலைவர் ), உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குஷல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, அஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, நுவான் பிரதீப், லகிரு திரிமன்னே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகள் வருமாறு, ஜூலை மாதம்  26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல்  7 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல்  16 ஆம் திகதி வரை கண்டி பல்லேகல மைதானத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 3 ஆவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 5 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிசெப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான ஒருரேயொரு இருபதுக்கு - 20 போட்டி செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.