கேதுவின் அம்சம் என போற்றப்படும் விநாயகப் பெருமானை ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம்.
இந்த தினத்தில் மண்ணாலான விநாயகரை வீட்டிற்கு வரவழைத்து, நான்கு வேளையிலும் விநாயகப் பெருமானுக்கு பிடித்த பூ, பழம், உணவு வகைகளை படைத்து, வணங்குவதன் மூலம் ஆயுள் முழுவதும் விநாயகர் பெருமானின் அருளாசிக்கு ஆளாகிறோம்.
இந்த விநாயகர் சதுர்த்தி தின கொண்டாட்டத்தை பிரத்யேகமாக வழிபட்டால்.. எம்முடைய பாவங்களும், பாவ கர்மாக்களும் நீங்கும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பிரத்யேக பொருட்கள் : அரச இலை- பச்சரிசி- நாட்டுச்சர்க்கரை.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகப் பெருமானுக்கு அபிஷேகங்கள் - அலங்காரங்கள் செய்து பிடித்த நிவேதனங்களை படைத்து வணங்கி மகிழ்கிறோம்.
அந்த தருணத்தில் இரண்டு அரச இலைகளை பறித்து, அதனை மஞ்சள் கலந்த நீரில் தூய்மைப்படுத்தி, அதில் ஒரு இலையில் சிறிதளவு பச்சரிசியையும், மற்றொரு இலையில் சிறிதளவு நாட்டுச் சர்க்கரையும் வைத்து உங்களுடைய பூஜை அறையில் இடம்பெறச் செய்யுங்கள்.
இந்த இரண்டு நிவேதனங்களையும் நீங்கள் விநாயகருக்கு தூப தீபம் காட்டுவது போல் இதற்கும் காட்டி வணங்கிட வேண்டும். விநாயகர் சதுர்த்தி திதி நிறைவடைந்த பிறகு அந்த இரண்டு அரச இலையையும் உங்களுடைய வீட்டின் நிலை வாசல் படிக்கு வெளியே வலது பக்கத்தில் வைத்து விடுங்கள்.
அடுத்த நாள் காலை அந்த நாட்டுச்சர்க்கரை மற்றும் பச்சரிசியில் இருந்து சிறிதளவு அதன் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அல்லது விநாயகர் எறும்பு என்று அன்புடன் குறிப்பிடப்படும் கருப்பு வண்ணத்திலான எறும்புகள் அதனை பசியாறினாலும் உங்களுடைய பாவகர்மாக்கள் நீங்கி புண்ணியம் அதிகரித்திருக்கிறது என பொருள் கொள்ளலாம்.
நாளை ஓகஸ்ட் 27 ஆம் திகதியன்று மாலை 3 மணி 50 நிமிடம் வரை சதுர்த்தி திதி இருப்பதால் விநாயகர் சதுர்த்தியை வெகு விவரிசையாக கொண்டாடி, அதனைத் தொடர்ந்து மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பிரத்யேக அரச இலை வழிபாட்டையும் மேற்கொண்டு, உங்களது பாவ கர்மாக்களை குறைத்துக் கொள்ளுங்கள். அதனூடாக உங்களுடைய வாழ்க்கையில் வெற்றியை பெறலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM