காத்தான்குடியில் கசிப்பு போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது

26 Aug, 2025 | 11:47 AM
image

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.      

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டட்பட்ட ஆரையம்பதி, தாளங்குடா, புதுக்குடியிருப்பு ,கிரான்குளம், நாவற்குடா, கல்லடி ஆகிய பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய திடீர்  சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

கைது செய்யப்பட்ட நபர்கள் செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03