(இராஜதுரை ஹஷான்)
அரசியல் பழிவாங்கலை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படாமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
75 ஆண்டுகால அரசியல் கட்டமைப்பை சாபம் என்று விமர்சித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.கடந்த கால அரசாங்கங்கள் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை நிர்வகித்துள்ளன. பொருளாதார மீட்சிக்கு நிலையான திட்டங்களை அரசாங்கங்கள் செயற்படுத்திய போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தின.இதனால் அந்த திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.
மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டத்தால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் மீள ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையே கர்மவினை என்று குறிப்பிடுவார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் பழிவாங்களுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகளுக்கிடையில் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் காணப்படலாம். இருப்பினும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கும்போது அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
அரசியல் பழிவாங்கலை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படாமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன. அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் அணிதிரள்வார்கள் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM