இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

25 Aug, 2025 | 03:08 PM
image

பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை (25) முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை 8:30 மணியளவில் ஆரம்பமான இந்த போராடாமல், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று அங்கு கோஷம் எழுப்பப்பட்டது.

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல கட்சிகள் தமது முழுமையான ஆதரவை வழங்கியபோதும் தேசிய மக்கள் சக்தியினர் மட்டும் பங்களிப்பு செய்ய வில்லை.

இவ் ஆர்ப்பாட்டத்தின்போது, நீண்ட காலமாக இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படும் பருத்தித்துறை தபால் அலுவலகம் முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்புமிக்க வெளிச்ச வீட்டில் பல காலமாக இருக்கும் இராணுவத்தினை உடனடியாக வெளியேற்ற வேண்டும். நூற்றாண்டு காலமாக இருக்கும் பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடம் மாற்றம் செய்யும் நோக்கம் காணப்படுவதால் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர் போல் கத்தி, ஐ.எம்.எப்....

2025-11-12 11:17:11
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02