குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி : வைத்தியர்கள் சிகிச்சையளிக்காததால் நோயாளர்கள் அவதி

25 Aug, 2025 | 02:57 PM
image

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்டநேரமாக சிகிச்சை வழங்கப்படாத சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இன்று திங்கட்கிழமை (25) காலை 6.30 மணியளவில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வயோதிபர்கள் இருவருக்கும், அவ் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கும் அப்பகுதியில் இருந்த குளவிகூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் கொட்டியுள்ளது. உடனடியாக உறவினர்களால் மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இருப்பதாக கூறி  நீண்டநேரம்  பார்வையிடவில்லையென நோயாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அத்தோடு இன்னும் பல நோயாளர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே சிகிச்சை பெற்றுள்ளமையை அவதானிக்ககூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நீண்ட நேர காத்திருப்பின் பின்னர்  தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் பணிபகிஸ்கரிப்பாக இருப்பினும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்களையாவது உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் என நோயாளர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36