மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நவீன சிகிச்சை

25 Aug, 2025 | 02:47 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் வாரிசு விடயத்தில் குறிப்பாக திருமணமான தம்பதிகள் தங்களுக்கான பிள்ளைகளை பெற்றுக் கொள்வதில் பாரிய இடையூறு உண்டாகிறது. 

மகப்பேறு வைத்திய நிபுணர்கள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் மழலை கனவை சாத்தியப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தொடர்ந்து நான்கு முறைக்கும் மேலாகவோ அல்லது அடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்பட்டாலோ.. திருமணமான பெண்மணிகளுக்கு மனதளவில் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதனை களைவதற்கு தற்போது எல் ஐ டி ( Lymphocyte Immunization Therapy) எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

திருமணமான முதல் ஆண்டில் தம்பதிகள் இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கான தாம்பத்திய முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஓராண்டிற்கு பிறகும் அவர்கள் இயற்கையான முறையில் கருத்தரிக்கவில்லை என்றால் அவர்கள் இது தொடர்பாக மகப்பேறு வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற தொடங்குகிறார்கள்.

சிலருக்கு ஐ யு ஐ எனும் சிகிச்சை முறையில் கருத்தரிக்க வைத்தால் ஆறு வாரம் முதல் பத்து வாரங்களுக்குள் கருச்சிதைவு நிகழ்கிறது. வேறு சிலருக்கு ஐ வி எஃப் எனும் செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சை மூலமாக கருத்தரிக்க வைத்தால்.. அவர்களுக்கும் ஆறு வாரம் முதல் பத்து வாரங்களுக்குள் கருச்சிதைவு நிகழ்கிறது. 

இத்தகைய தருணங்களில் பெண்மணிகள் மனதளவில் சோர்வடைந்து விடுகிறார்கள். அத்துடன் செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சை குறித்த எதிர்மறையான எண்ணங்களை மனதில் பதிவேற்றிக் கொள்கிறார்கள். வைத்திய நிபுணர்களும் சிகிச்சைக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவர்களின் கருச்சிதைவுக்கான அதாவது தொடர் கருச்சிதைவுக்கான காரணங்களை ஆராயத் தொடங்குகிறார்கள்.

இது தொடர்பான காரணங்களை வைத்திய நிபுணர்கள் துல்லியமாக விவரிக்கையில்.. உங்களுடைய கர்ப்பப்பையில் இடம் பிடித்திருக்கும் கருவை வளர்வதற்கு, உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் எதிராக செயல்படுவதால் கருச்சிதைவு நிகழ்கிறது. 

இதனால் கர்ப்பத்திற்கு - கரு தரிப்பதற்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை சாதகமாக தயார்படுத்துவதற்காக இந்த எல் ஐ டி எனும் சிகிச்சை பாவிக்கப்படுகிறது.

மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கு பெண்களின் உடலில் உள்ள லுக்கோசைட் ஆன்ட்டி பாடிகளை வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனை மூலம் கண்டறிகிறார்கள். இதன் பிறகு குருதியில் இதனுடைய தாக்கம் குறித்த பரிசோதனையை பிரத்யேகமாக மேற்கொள்கிறார்கள். 

அதனைத் தொடர்ந்து எல் ஐ டி என்ற சிகிச்சை மூலம் கருச்சிதைவு நிகழாமல் குழந்தையின் பிறப்பு விகிதத்தினை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். சில பெண்களுக்கு இத்தகைய தருணங்களில் மூன்று அல்லது நான்கு வார இடைவெளிகளில் இரண்டு முறை பிரத்யேகமாக ஊசி வடிவிலான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 

இது நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை சாத்தியப்படுத்தி, குழந்தை பிறப்பிற்கான சாத்திய கூறுகளை மேம்படுத்துகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தற்போது இது மீண்டும் மீண்டும் கருச்சிதைவை எதிர்கொள்ளும் பெண்கள் பெண்மணிகளுக்கு ஆதரவான சாதகமான பலனை வழங்குவதாக  வைத்தியர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

வைத்தியர் அருணா தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28