யாழ். வட்டுக்கோட்டையில் புதுப்பொழிவு பெறும் 400 ஆண்டுகள் பழமையான சிவாலயம் - விரைவில் கும்பாபிஷேகம்!

25 Aug, 2025 | 12:36 PM
image

வரலாற்று சிறப்பு வாய்ந்த, 400 ஆண்டுகள் பழமையான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் தெரிவித்துள்ளது. 

மிகத் தொன்மையான வழிபாட்டுத்தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டுகாலம் கவனிப்பாரின்றி காணப்பட்ட நிலையில், அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்திருக்கும் நிலையில், ஆலயத்தில் மிக விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, அது மக்களின் வழிபாட்டுத்தலமாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிபவருமான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கியிருந்த நிலையில் இந்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது.

ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்தல், எண்ணெய்க் காப்பு சாத்தல், கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும்.

எமது மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை தலைமுறை தலைமுறையாக கடத்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் 2021ஆம் ஆண்டு அப்போதைய யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம்  தலைமையில் யாழ்ப்பாண மரபுரிமை மையம்  உருவாக்கப்பட்டது.

நல்லூர் இராஜதானியின் தோரணவாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில், 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள் உருவாக்கப் பணியானது யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் மூன்றாவது செயற்றிட்டமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கராத்தே சுற்றுப்போட்டி

2026-02-18 15:49:50
news-image

இலங்கையின் தனித்துத்தை உணர்த்தும் 'செலிப்ரேடிங் ஸ்ரீ...

2026-02-18 14:26:03
news-image

தமிழர் கலைகள் - மரபும் மாற்றமும்...

2026-02-18 13:44:46
news-image

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா பெப்....

2026-02-17 19:22:29
news-image

திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் அனைத்துலக பன்னிரு...

2026-02-17 17:16:26
news-image

கொழும்பு மாவத்த புனித அந்தோனியார் தமிழ்...

2026-02-17 15:18:36
news-image

நினைவில் நிற்கும் ஒரு நாள்: Night...

2026-02-16 14:47:25
news-image

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

2026-02-16 11:02:14
news-image

9ஆவது அமர்வு கண்ட ஹைக்கூ கவியரங்கம்

2026-02-16 04:57:20
news-image

சென் பற்றிக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல...

2026-02-15 17:20:14
news-image

அகில இலங்கை SAMAPOSHA Champion Trophy:...

2026-02-15 16:04:45
news-image

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் அதிபர்கள் தினம்

2026-02-15 15:28:06