யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து, கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனா்.

கிளிநொச்சி டிப்போச்சந்தி  பசுமை பூங்காவில் இவ்  ஆர்ப்பாட்டம்  இன்று காலை 10 மணிக்கு நடத்தப்பட்டது.

கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர்  பின் வீதியில்  யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து   குற்றவாளிகளை உடனே தண்டிக்கவும்,  நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?   இலங்கையில் நீதி மறுக்கப்படுகின்றதா? சுட்டதால் சட்டம் சாகாது நீதிக்கு விடுக்கப்படும் சவால் நல்லாட்சிக்கு சவால் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்  ஏந்தியிருந்தனா்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டச் செலயகம் சென்று, அங்கு ஜனாதிபதிக்கான மகஜரையும் கையளித்தனா்.