ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

23 Aug, 2025 | 05:31 PM
image

சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை  (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர்.

இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தற்போது மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49