இன்றைய சூழலில் எம்முடைய இளம் தாய்மார்களின் பாரிய கவலை என்னவெனில்.. தம்முடைய பிள்ளை அனைத்து இயல்பான விடயங்களையும் விரைவாக செய்திட வேண்டும் என்பதுதான்.
அதில் எந்த தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது. குறிப்பாக நிற்றல் - நடத்தல்- பேசுதல்- போன்ற வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை சீக்கிரமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமாக இருக்கிறது.
இதற்கு என்ன செய்யலாம்? என்பதையும் , இதற்கான பெற்றோர்களின் பங்களிப்பு என்ன? என்பது குறித்தும் எம்முடைய குழந்தைகள் நல நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
பொதுவாக பிள்ளைகள் பிறந்த பிறகு ஓராண்டு வரை முகம் பார்க்கும் கண்ணாடியை பிள்ளைகள்- பிறந்த பச்சிளம் குழந்தைகள்- பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.
கடந்த தசாப்தங்களில் எம்முடைய முன்னோர்கள் பிள்ளைகள் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்தால் அவர்களின் பேச்சுத் திறன் தாமதமாகும் என நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் இது அறிவியல் பூர்வமாக தவறு என வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
உங்களது பிள்ளை ஐந்து அல்லது ஆறாவது மாதத்தில் அடி எடுத்து வைக்கும் போது, 'மெண்டல் பிளே' என்ற ஒரு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதாவது இந்த காலகட்டத்தில் உங்களுடைய பிள்ளையை முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்க அனுமதிக்க வேண்டும்.
அவர்கள் தங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்து சிரிப்பார்கள். தங்களுடைய பாவனைகளை வெவ்வேறு விதமாக காண்பித்து அதனை ரசிப்பார்கள். ஒலி எழுப்புவார்கள். கண்ணை மூடி கண்ணை திறந்து பார்ப்பார்கள்.
வாயில் ஊறும் எச்சிலை வைத்து விளையாடுவார்கள். இதுபோன்ற பல விடயங்களை அவர்கள் கண்ணாடியை பார்த்து மேற்கொள்வார்கள். இதனை அவர்கள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளும்போது ஒலி அலை எழும்பி, பேச்சுத்திறன் வெளிப்படும்.
இதனால் உங்களுடைய குழந்தை விரைவாக பேச்சுத் திறனை பெற வேண்டும் என்றால் அதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு கருவி என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
அதே தருணத்தில் குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவு செய்து, முகத்தை நேருக்கு நேராக வைத்து பேசுங்கள். குழந்தை உங்களுடைய முகத்தை பார்த்து அதன் மேனரிசங்களையும், பாவனைகளையும் உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தும்.
அத்துடன் அது தொடர்பாக சில ஒலிகளை எழுப்பி தன் உணர்வை வெளிப்படுத்தும். அதே தருணத்தில் குழந்தைகளுக்கு அவர்களுடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் பொருட்களுக்கான பெயர்களை நீங்கள் உச்சரித்தால் ... அதனை கேட்டும் குழந்தைகள் உச்சரிக்க முயற்சிக்கும். உங்களது முயற்சி விரைவில் வெற்றியை அளித்து குழந்தை பேசத் தொடங்கும்.
வைத்தியர் சாகுல் தொகுப்பு அனுஷா.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM