எம்மில் பலரும் தினமும் 100 கிலோ மீற்றர் அளவிற்கு இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பழக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள். அத்துடன் அவர்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று தங்களின் மணிக்கட்டு பகுதி மற்றும் கைகளை அதிகமாக பயன்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகையவர்களுக்கு திடீரென்று முழங்கை பகுதிகளிலும், முழங்கை மூட்டு பகுதிகளிலும் தாங்க முடியாத வலி ஏற்படக்கூடும். இதற்கு உடனடியாக தற்காலிக வலிநிவாரணிகளைப் பயன்படுத்துவர்.

இதற்கு மருத்துவத்துறையில்கோல்ப்பர்ஸ் எல்போஎன்று குறிப்பிடுவார்கள். இதனை பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் மூலம் குணப்படுத்திட இயலும். இதன் போது நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் வலியின் தீவிரத்தைப் பொறுத்து பிஸியோதெரபி, அல்ட்ர் சவுண்ட் தெரபி, கிரையோதெரபி, உடற்பயிற்சி ஆகிய சிகிச்சைகளை அளிப்பார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள தசைகள் வலுவடையும். அதனைத் தொடர்ந்து வலி குறைந்துவிடும். பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் சத்தான உணவு முறையை கடைபிடித்தால் இதனை முழுமையாக குணப்படுத்திட இயலும். இவ்வகையினதான சிகிச்சையின் போது பூரண ஓய்வில் இருந்தால், விரைவில் குணமடையலாம்.

Dr. செந்தில்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்