முன்னாள் ஜனாதிபதியின் மகனும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை பாராளுமன்றில் இணைந்து 40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாமல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை பாராளுமன்றில் இணைந்து 40 வருடங்கள் நிறைவடைந்தமைக்கு நான் வாழ்த்துகின்றேன். அரசியல் ரீதியாக கருத்து வேறுப்பாடுகள் இருந்தாலும் அரசியல் உலகில் மைல்கல்லை எட்டிய பிரதமர் ரணிலுக்கு கௌரவமளிக்க கடமைப்பட்டுள்ளதாக“ நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.