சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகவலரான ஹேமரத்ன மீது இனந்தெரியாத  ஆயுததாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் சிலாபத்திலுள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அன்னாரது பூதவுடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.