கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு விளக்கமறியல் !

Published By: Vishnu

22 Aug, 2025 | 10:39 PM
image

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற  விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.

குறித்த பிணை தொடர்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் தீலிப்ப பீரிஸ் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து  குறித்த பிணை வழங்கலில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பலத்த இழுபறிக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37
news-image

மிரிஹானாவில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி...

2026-09-16 13:04:17
news-image

மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு...

2026-09-16 12:00:58
news-image

ரணிலை சந்தித்தார் இலங்கைக்கான புதிய சீனத்...

2026-09-16 14:23:24
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான சொகுசு வாகன...

2026-09-16 11:52:52