குவைத்திலிருந்து 51 பணிப்பெண்கள் இன்று காலை நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குவைத்திலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தினூடாக குறித்த 51 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்ததையடுத்து குறித்த 51 பணிப்பெண்களும் குவைத்திலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராயலத்தில் அடைக்கலம் புகுந்த நிலையில், அவர்கள் அனைவரும் இன்று தாய்நாடு திரும்பியுள்ளனர்.

இன்று அதிகாலை 6.30 மணியளவில் 51 பணிப்பெண்களும் நாட்டை வந்தடைந்தனர். நாட்டிற்கு வந்து சேர்ந்த பணிப்பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.