தாடை அமைப்பிலுள்ள குறைபாட்டை சீரமைக்கும் நவீன சிகிச்சை - மியூவிங் தெரபி

22 Aug, 2025 | 05:07 PM
image

இன்றைய திகதியில் பாடசாலையில் பயிலும் எம்முடைய பெண் பிள்ளைகளின் முகத்தோற்ற பொலிவில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துகிறார்கள். 

மேலும் சில மாணவிகளுக்கும், கல்லூரியில் பயிலும் இளம் பெண்களுக்கும் அவர்களுடைய முகத்தில் உள்ள தாடை பகுதி இயல்பாக இல்லாமல் சற்று வேறுபட்ட நிலையில் அமைய பெற்றிருக்கும். 

இதனால் அவர்களுடைய தோற்ற பொலிவில் மாறுபாடு ஏற்பட்டிருக்கும்.  இந்நிலையில் இத்தகைய குறைபாட்டை சீரமைக்க மியூவிங் தெரபி எனும் சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை முறை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மியூவிங் தெரபி என்பது தாடை பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை மறு வரையறை செய்யவும்,  மேம்படுத்தவும், பற்களை சீரமைக்கவும் உதவும் நவீன சிகிச்சை முறையாகும். 

அத்துடன் தூக்கத்தில் சுவாசத்திணறல் மற்றும் குறட்டை உள்ளிட்ட பாதிப்பை எதிர்கொண்டிருந்தாலும்... அதனை சீரமைக்கவும் இந்த சிகிச்சை முறை பயனளிக்கிறது.

இத்தகைய சிகிச்சையின் போது உங்களது உதடுகளையும், பற்களையும் மூடிக்கொண்டு, உங்கள் வாயின் மேல் புறத்தில் அதாவது மேல் அண்ண பகுதியில் உங்களுடைய நாக்கின் பகுதியை மேல் நோக்கி இழுத்துச் சென்று அழுத்த வேண்டும்.  

விரிவாக விவரிக்க வேண்டும் எனில் நாக்கின் நுனி பகுதி மேல் வரிசை பற்களின் முன் பக்கத்துக்கு பின்பகுதியில் வைத்து நாக்கின் முழு பகுதியையும் மேல் அண்ணத்தில் ஒட்டி இருக்கும் படி வைத்திருக்க வேண்டும்.

இத்தகைய சிகிச்சை முறை ஆர்த்தோட்ரோபிக்ஸ் எனும் சிகிச்சை முறையிலிருந்து உருவானது என்றும், ஆங்கிலேய பல் சத்திர சிகிச்சை மற்றும் பல் சீரமைப்பு வைத்திய நிபுணர்களால் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் தாடை பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை சீரமைக்கவும், பற்களின் சீரற்ற தன்மையை ஒழுங்குபடுத்தவும், பேச்சுத்திறன் மேம்படவும், சுவாசம் மற்றும் விழுங்குதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கவும் டெம்போரோமாண்டிபுலர் மூட்டு வலி என்னும் வலி பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கவும் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளலாம் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சை பெரியவர்களுக்கு எதிர்பார்த்த பலனை குறைவாக வழங்கினாலும், பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு இத்தகைய சிகிச்சை நல்லதொரு பலனை வழங்குவதாக வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள். 

மேலும் இத்தகைய சிகிச்சையை பல் வைத்திய நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக ஓர்த்தோக்னாதிக் சத்திர சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரையின் பெயரில் மேற்கொள்ள வேண்டும் என்றும் வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வைத்தியர் ரீஜா ரஞ்சித் - தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-20 17:09:46
news-image

குரல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-07-18 16:04:06
news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11