'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

22 Aug, 2025 | 02:09 PM
image

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'விஸ்வம்பரா'  எனும் பான் இந்திய திரைப்படத்தின் பிரத்யேக காணொளி அவருடைய பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வம்பரா' எனும் திரைப்படத்தில் சிரஞ்சீவி, திரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர், பொலிவுட் நடிகை மௌனி ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 சோட்டா கே. நாயுடு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி மற்றும் பீம்ஸ் சிசிரோலியோ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.  

எக்சன் வித் ஃபேண்டஸி படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை யு வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி & ப்ரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக காணொளியில்.. பிரமாண்டமான முறையில் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பான் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

மேலும் 'விஸ்வம்பரா' திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின்...

2026-09-09 15:44:52
news-image

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

2026-09-09 15:07:00
news-image

நடிகை சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்'...

2026-09-09 14:58:29
news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49