(எஸ்.கணேசன்)

பெற்றோல்,  டீசல்  புதிய விலைகள்  நிர்ணயம் தொடர்பாக  நேற்றும் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை  என்று  அமைச்சரொருவர்   வீரகேசரி இணையத்தளத்துக்குத்  தெரிவித்தார். 

இதேவேளை,  பிரதமர்  பொருளாதார  மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக சுவிற்ஸர்லாந்து   சென்றுள்ளதால்   இந்த விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலே  ஆராயப்படவுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார். 

மசகு எண்ணெயின் விலை  உலக  சந்தையில்  12  வருடங்களின்  பின்னர்  ஒரு  பெரல்  29 அமெரிக்க  டொலர்களாக  குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.