இந்­திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். இதனால் காலியில் நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது டெஸ்டில் பங்­கேற்­க­மாட்டார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய அணி 3 வகை கிரிக்கெட் தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக இலங்கை வந்­துள்­ளது. முதலில் 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்­கு­கி­றது. 

முதல் டெஸ்ட் காலி மைதா­னத்தில் நாளை தொடங்­கு­கி­றது. 

இந்­நி­லையில் காலி டெஸ்ட் போட்­டிக்கு வீரர்கள் தயா­ராகி வரும் நிலையில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். இதனால் முதல் டெஸ்டில் பங்­கேற்­பது சந்­தேகம் எனக் கூறப்­பட்­டது.

இந்­நி­லையில் இந்­திய கிரிக்கெட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். முன்­னெச்ச­ரிக்கை கார­ண­மாக, ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இதனால் அவர் காலி டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என அறிவித்துள்ளது.