திருமணத் தடையை அகற்றும் பிரத்யேக வழிபாடு

21 Aug, 2025 | 05:51 PM
image

இன்றைய திகதியின் எம்முடைய வீட்டில் உள்ள பெண் பிள்ளைகள் உயர்கல்வி கற்று தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க தொடங்கியவுடன் தான் அவர்களுடைய பெற்றோர்கள் - திருமணம் குறித்த பேச்சு வார்த்தையை தொடங்குகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போதைய சூழலில் பெண் பிள்ளையைப் பற்றிய விவரங்களை திருமண தகவல் நிலையத்தில் பதிவு செய்கிறார்கள் அல்லது நன்கு அறிமுகமான திருமணம் தொடர்பான இடைத்தரகர்களிடம் பெண் பிள்ளையின் ஜாதகத்தையும் , புகைப்படத்தையும் வழங்கி பொருத்தமான வரனை பாருங்கள் என வேண்டுகோள் விடுகிறார்கள். இப்படி திருமண பேச்சு வார்த்தையை தொடங்கியவுடன் எந்த தடங்கலும் இல்லாமல் விரும்பிய வகையில் குறுகிய காலத்தில் நல்லதொரு வரன் அமைய வேண்டும் என்றால்.. அதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : தாழம்பூ

பூக்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் எளிதாக கிடைக்காத ஆனால் கிடைக்கக்கூடிய பொருள்தான் தாழம்பூ. இந்த தாழம் பூவை வாங்கி ஹஸ்த நட்சத்திரம் வரும் நாளன்று அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று தனிச் சன்னதியில் விற்றிருக்கும் அம்பாள் அல்லது பெண் தெய்வத்திற்கு சாற்றி, தடங்கல் இல்லாமல் திருமணம் நன்றாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தால்... அடுத்த ஹஸ்த நட்சத்திரம் வரும் தினத்திற்குள் நல்லதொரு வரன் அமைந்துவிடும்.  நீங்கள் ஹஸ்த நட்சத்திர தினத்தன்று தாழம்பூவை வைத்து அம்பாளை வழிபட்ட பிறகு உங்களுடைய ஜாதகத்தை இடைத்தரகரிடம் வழங்கி வரன் பார்க்கச் சொன்னாலும்.. விரைவில் நல்ல வரன் அமையும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினையை குறைத்து கொள்வதற்கான எளிய...

2026-09-15 14:48:01
news-image

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உப ரத்தின கல்

2026-09-14 15:44:29
news-image

பண தட்டுப்பாடு இன்றி நீடித்திருக்க!

2026-09-12 15:08:31
news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27