'டாடா' என்ற வெற்றி படத்தின் மூலம் வணிக சினிமாவிற்கான நாயகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ' கிஸ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள' கிஸ் ' எனும் திரைப்படத்தில் கவின், பிரீத்தி அஸ்ராணி, பிரபு , விடிவி கணேஷ், ஆர். ஜே. விஜய், ராவ் ரமேஷ், தேவயானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இதனிடையே 'டாடா' எனும் வெற்றி படத்திற்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்',' ப்ளடி பெக்கர்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை என்பதும், இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் தான் கவின் நட்சத்திர நடிகராக வலம் வர இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM