'பாகுபலி' பட புகழ் பான் இந்திய நட்சத்திர நடிகையான அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதி ( Ghatti) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' தஸ்ஸோரா' எனும் இரண்டாம் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள காதி ( Ghatti) திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி , விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு, ஜான் விஜய், ரவீந்திர விஜய், வி டி வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மனோஜ் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'தஸ்ஸோரா தஸ்ஸோரா ' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத பின்னணி பாடகிகள் கீதா மாதுரி- சுருதி ரஞ்சனி மற்றும் சாகேத் கொமந்தூரி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கான காணொளியும், பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM