ஏனைய வாக்குறுதிகளை போன்று மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதியையும் அரசாங்கம் பொய்யாக்கக் கூடாது – நளின் பண்டார

21 Aug, 2025 | 04:45 PM
image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியிலான நிர்வாக அதிகாரங்களை வழங்க வேண்டும்.  ஏனைய வாக்குறுதிகளை போன்று மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதியையும் அரசாங்கம் பொய்யாக்க கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற  உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நடுத்தர மக்களின் வாகன  கொள்வனவு   இலக்கு வெறும் கனவாக மாறியுள்ளது. அதீத வரியினால்  சாதாரண வாகனத்தை கூட  கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.வாகன கொள்வனவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கம் ஒன்றை குறிப்பிடுகிறது. தொழிற்சங்கத்தினர்  பிறிதொன்றை குறிப்பிடுகின்றனர். ஆகவே இவ்விடயத்தில்  அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட  வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு   அரச சேவையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள் ஆகவே அரசாங்கம் அவர்களின்  கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதை தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். பொருளாதார மீட்சிக்கு ஒருசில முற்போக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளமை சிறந்தது. கஞ்சா பயிர்ச்செய்கைக்கு மீரிகம பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமற்றது.  முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு சொந்தமான பிறிதொரு பகுதியை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி  வாக்குறுதியளித்தார்.எதிர்வரும் மாதத்துடன் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சாதகமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு  தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியிலான நிர்வாக அதிகாரங்களை வழங்க வேண்டும்.  ஏனைய வாக்குறுதிகளை போன்று மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதியையும் அரசாங்கம் பொய்யாக்க கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20