எம்மில் பலரும் நல்ல காரியங்களை தொடங்குவதற்கு முகூர்த்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களுக்கு ராசியான நாள்களையும், பொருத்தமான நாள்களையும், சுப முகூர்த்த நாள்களையும் தெரிவு செய்து தங்களது தொழிலை தொடங்குவார்கள்.
வேறு சிலர் சுப நிகழ்வுகளை தொடங்குவார்கள். இந்நிலையில் குரு புஷ்ய யோகம் என முன்னோர்களால் குறிப்பிடப்படும் அபூர்வமான நாள் நாளை இடம் பெறுகிறது.
குரு புஷ்ய யோகம் என்பது முப்பது மணி தியாலம் வரை நீடிக்கும் ஒரு சுபயோக தருணமாகும். அதாவது வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே குரு புஷ்ய யோக நாளாகும் பஞ்சாங்க கணக்கின்படி ஓகஸ்ட் 21 ஆம் திகதி காலை 6:00 மணி 11 நிமிடம் முதல் மறுநாள் மதியம் 12 மணி எட்டு நிமிடங்கள் வரை இந்த குரு புஷ்ய யோக தருணம் இருக்கிறது.
இந்த நேரத்தில் குரு ஹோரை தருணத்தில் லட்சுமி தாயாரை மனதார பிரார்த்தித்தால் செல்வ வளம் ஓங்கும். குருவின் அம்சமாக திகழும் தங்கத்தை இன்று வாங்கினால்.. அமோகமாக வளர்ச்சி அடையும். இன்னும் குறிப்பாக விவரிக்க வேண்டும் என்றால் அட்சய திருதியை விட நாளை இடம் பெறும் குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்கினால்... தங்கம் வளரும். உங்கள் புகழும் மேலோங்கும். உங்கள் தலைமுறையும் சிறக்கும்.
பூச நட்சத்திரத்தில் லட்சுமி தாயார் பிறந்தவர் என்பதால் நாளை மகாலட்சுமியை குரு ஹோரையிலும், , சுக்கிர ஹோரையிலும் வணங்குவது தன வரவை மேம்படுத்தும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM