மூச்சு வாங்குவதும் இதய பாதிப்பின் அறிகுறியா..?

20 Aug, 2025 | 05:53 PM
image

இன்றைய இளைய தலைமுறையினர் சொகுசாகவும், சௌரியமாகவும் அமர்ந்து பணியாற்றுவதில் அக்கறை செலுத்துகிறார்கள். இவர்களில் யாருக்கேனும் திடீரென்று மூச்சுத் திணறல் அல்லது நடந்து செல்லும் போது மூச்சிரைப்பு அல்லது மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அது இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமோ? என்ற அச்சம் எழுகிறது.

இது தொடர்பாக இதய மருத்துவ நிபுணர்கள் விவரிக்கையில், '' நீங்கள் நாளாந்தம் உங்களுடைய அலுவலகம் இருக்கும் இரண்டாவது தளத்திற்கு மாடிப்படிகள் வழியாக ஏறிச் சென்று பணியாற்றும்போது... நீங்கள் பணியில் புதிதாக சேரும் போது மூச்சு வாங்குவது என்பது இயல்பாக நடைபெறும்.

ஏனெனில் இந்த தருணத்தில் எம்முடைய நுரையீரலும், இதயமும் புதிய நடைமுறையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதில் தடுமாறும். இதனால் நீங்கள் புதிதாக திடீரென்று நான்காவது தளத்திற்கு மாடிப்படிகள் வழியாக ஏறிச் செல்லும் போது மூச்சு வாங்கும். இது இயல்பானது தான்.

ஆனால் அதே தருணத்தில் நீங்கள் பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு வழக்கமாக இரண்டாவது தளத்திற்கு மாடிப்படிகள் வழியாக ஏறிச் செல்லும் போது மூச்சு வாங்கினாலோ அல்லது மூச்சிரைப்பு ஏற்பட்டாலோ அல்லது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ அல்லது சுவாசிப்பதில் சிறிய அளவிலான அசௌகரியம் ஏற்பட்டாலோ உங்களுடைய இதயம் பாதிப்பினை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொண்டு , உடனடியாக இதய சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

அதே தருணத்தில் சிலருக்கு வழக்கமான நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது ( நடைப்பயிற்சி, உடற்பயிற்சி..)  மூச்சு திணறலோ ..மூச்சு வாங்குவதோ.. மூச்சிரைப்பு ஏற்படுவதோ அல்லது இயல்பை விட அதிகமாக வியர்த்தாலோ உங்களுடைய இதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொண்டு உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று இதயம் தொடர்பான சிகிச்சையையும், ஆலோசனையையும் பெற வேண்டும். ஏனெனில் இன்றைய சூழலில் அறிகுறிகளை வெளிப்படுத்தாத இதய பாதிப்பு அதிகரித்து வருகிறது. '' என்கிறார்கள்.

வைத்தியர் புனித் குமார் - தொகுப்பு அனுஷா.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒவ்வாமை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-09-15 14:44:25
news-image

மைக்சுரிஷன் சின்கோப் எனும் திடீரென்று ஏற்படும்...

2026-09-14 15:28:54
news-image

ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பிற்குயிய நவீன...

2026-09-12 15:08:19
news-image

அயோர்ட்டாபைஃபெமரல் எனும் கால் ரத்த நாள...

2026-09-11 17:01:49
news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39