மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தீர்மானித்துள்ளன.

 

தாங்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு 3 மாத காலமாகியும் இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இந்த நிலையிலேயே தாங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை எண்ணெய் தாங்கிகளை  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல் தொடர்பில் நிரந்த தீர்வொன்று தேவை என அரசாங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அது தொடர்பான தீர்மானம் பெற்றத்தரப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.