இலங்கைக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகளுடன் நபரொருவர் இந்திய குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த  இருந்த ( இந்திய ரூபா)  5 இலட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை இராமநாதபுரத்தில் வைத்து ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துடன் லொறிச் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட லொறிச் சாரதியிடம் ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.