கப்பல்களில் பணச்சூதாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால் தென்னாசியாவின் சூதாட்டமாக இலங்கை உலக வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படும் ; சாணக்கியன் இராசமாணிக்கம்

19 Aug, 2025 | 03:57 PM
image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தல்  சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்  இலங்கையில்  சமூக பிரச்சினை தோற்றம் பெறும். தாய்லாந்து பட்டாயா என்று குறிப்பிட்டால் அனைவருக்கும் என்ன நினைவு வரும் என்பதை அறிவோம். கப்பல்களில் பணச்சூதாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால் தென்னாசியாவின் சூதாட்டமாக இலங்கை உலக வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற பணச்சூதாட்டத்தை  ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் இதுவரை காலமும் நிலப்பரப்பில் தான்  பணச்சூதாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பரபபில் நங்கூரமிடும் கப்பல்களில் பணச்சூதாட்டத்தை நடத்தப்படும். இலங்கை வரலாற்றில் இவ்வாறான நிலை முன்னொருபோதும் தோற்றம் பெறவில்லை. 

பிற நாடுகளின் கப்பல்கள் இலங்கையின் துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் அனுமதிப்பெற்ற வகையில்  பணச்சூதாட்டத்தை நடத்த முடியும் இது பாரதூரமானது.

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தன்மை காணப்படுகிறது. இந்த சட்டத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும்,பூகோள அரசியலுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படலாம்.

சீன நாட்டு கப்பல் அனுமதி பெற்று திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டு பணச்சூதாட்டத்தை நடத்த முடியும்.

சூதாட்டத்தின் ஊடாக அரச வருமானத்தை  ஈட்டிக்கொள்ள வேண்டுமாயின்  பிரதான கசினோ தரப்பினரிடமிருந்து  2015-2023  ஆண்டுக்கான நிலுவை வரியை அரசாங்கம் அறவிட வேண்டும்.இதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்  சமூக பிரச்சினையும் தோற்றம் பெறும். தாய்லாந்து பட்டாயா என்று குறிப்பிட்டால் அனைவருக்கும் என்ன நினைவு வரும் என்பதை அறிவோம்.

கப்பல்களில் பணச்சூதாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால் தென்னாசியாவின் சூதாட்டமாக இலங்கை உலக வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படும். சட்டமூலத்தில் கப்பல் என்ற சொல் மறைக்கப்பட்டுள்ளது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48