பரந்தனில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி போதையில் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி - நீதிமன்றம்

19 Aug, 2025 | 06:55 PM
image

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி விபத்தின் போது போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தார் என மருத்துவ அறிக்கை மூலம் உறுதியாகியதுடன் டிப்பர் வாகனத்தின் உரிமையாளரையும் மன்றில் ஆஜர் படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மாதம் 31 ஆம் திகதி கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி நோக்கி சென்ற பெண் ஒருவரை அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில்  குறித்த விபத்து இடம்பெற்றத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்துடன் தொடர்புபட்ட டிப்பர் வாகனத்தின்  சாரதி கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை  (19) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில்   முற்படுத்திய போது குறித்த சாரதி வாகனத்தை செலுத்தும் போது போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தார் என்பதுடன் நுகேகொட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த அவரது இரத்த மாதிரிகளில் அவர் விபத்தின் போது போதைப் பொருளை உள்ளெடுத்திருந்தார் என்பது தொடர்பான அறிக்கையும் இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடுள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் உரிமையாளரையும் சந்தேக நபராக மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 

குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகி இருந்தார். குறித்த டிப்பர் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறான விபத்துக்கள் பொறுப்பற்ற செயலாலே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16