சீனு ராமசாமியின் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவான படம் இடம்பொருள் ஏவல். தடைகள் பல கடந்து இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

‘இடம்பொருள் ஏவல்‘ படத்தின் பணிகள் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நிவேதிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். லிங்குசாமியின் படங்கள் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்ததால் கடன் சுமைக்கு ஆளானார். தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாலும், விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வசூலில் சிறப்பாக இருப்பதாலும் விநியோகஸ்தர்கள் இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை இப்படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருப்பதாகவும் இயக்குநர் சினு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்