வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது உண்மையல்ல ; கபீர் ஹாசிம்

19 Aug, 2025 | 02:17 PM
image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

சுற்றுலாத்துறை மற்றும் தேசிய தொழிற்றுறை ஊடாக வெளிநாட்டு கையிருப்பை  அதிகரித்துக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது உண்மையல்ல. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு உயர்வாக காணப்பட்டது. ஆனால் தற்போது கையிருப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது சிவப்பு எச்சரிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற பணச்சூதாட்டத்தை  ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள்  ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன  திறந்த பொருளாதாரக் கொள்கைக்காக  பல வெளிநாட்டு முதலீடுகளை  நாட்டுக்கு கொண்டு வந்தார். 

மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்களாக இடதுசாரி கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன.  நாட்டின்  பொருளாதார சாபத்தின் பிரதான பங்காளி மக்கள் விடுதலை முன்னணி என்றே குறிப்பிட வேண்டும்.

கடந்த  கால அரசாங்கள் காலத்தின் தேவையறிந்து கொண்டு வந்த சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியே எதிர்ப்பு தெரிவித்து அனைத்தையும் இல்லாதொழித்தார்கள்.  

அன்று எதிர்த்த முதலீட்டுத் திட்டங்களை இன்று  ஏற்கிறார்கள் இதனையே கர்மவினை என்றே குறிப்பிட வேண்டும். பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும்  அதிகாரசபை ச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மத அடிப்படையில் சூதாட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு .

பொருளாதார மீட்சிக்குரிய ஒரு  முறைமையாக இதனை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.  பணச்சூதாட்டம் முறையான ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.

இந்த சட்டமூலம் பல குறைப்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்படும்  அதிகாரசபைக்கு  தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்  நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சரால் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்றது. இந்த அதிகார சபைக்கான நியமனம் அரசியலமைப்பு பேரவை ஊடாக வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் அதிகார சபைகளின் சட்டத்திட்டங்கள் மற்றும்  ஒழுங்குவிதிகளை தயாரிக்கும் அதிகாரம்   நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது திருத்தப்பட வேண்டும். 

நிதியமைச்சரை பிரதான சூதாட்டகாரராக மாற்றும் வகையில் இந்த சட்டமூலத்தில் பல விடயங்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. சீன  எக்சிம் வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்று மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் 335  மில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன்  பல்தரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து 95 மில்லியன் டொலர் வரையின் கடனுதவி கிடைக்கப்பெற்றுள்ளன.

சுற்றுலாத்துறை மற்றும் தேசிய தொழிற்றுறை ஊடாக வெளிநாட்டு கையிருப்பை  அதிகரித்துக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது உண்மையல்ல, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு உயர்வாக காணப்பட்டது. ஆனால் தற்போது கையிருப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது சிவப்பு எச்சரிக்கையாகும்.

வெளிநாட்டு கையிருப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கு முறையான மற்றும் நிலையான திட்டங்களை செயற்படுத்தாமல்  சீனாவிடமிருந்து கடன் பெற்று அதிவேக நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.  வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்தால்  பொருளாதார முகாமைத்துவத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர்...

2026-03-16 14:13:58
news-image

சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் கிவ்.ஆர் முறைமை...

2026-03-16 14:40:34
news-image

அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழலை...

2026-03-16 13:51:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-16 14:16:20
news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு...

2026-03-16 14:11:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 14:14:40
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45