வீரமுனை பெயர்ப்பலகை அமைக்க தடுத்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள்; அதிகாரிகளுக்கு சாதகமாக செயற்பட்ட பொலிஸார் - வீரமுனை மக்கள் குற்றச்சாட்டு

Published By: Vishnu

19 Aug, 2025 | 03:24 AM
image

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை-கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை இன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது.

எனினும் அங்குவந்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த சம்மாந்துறை பொலிஸாரும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சாதகமான முறையில் செயற்பட்டதாக வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில் பெயர்பலகை நடுவதற்கு பிரதேசசபையிடம் எந்த அனுமதியும் பெறத்தேவையில்லாத நிலையில் இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பிரதேச மக்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதனை போலியான காரணங்கள் கூறி தடுத்தவர்கள் மீண்டும் அதேவேலையினை செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேசசபையில் உள்ள சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வீரமுனையின் அடையாளத்தினை இல்லாமல்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் இது கண்டனத்திற்குரியது எனவும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57