ரீனல் ஓஸ்டியோடிஸ்ட்ராபி எனும் எலும்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை

18 Aug, 2025 | 04:48 PM
image

எம்மில் சிலருக்கு ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர்களுடைய எலும்பு பகுதியில் ஏற்படும் பாதிப்பிற்கு ரீனல் ஓஸ்டியோடிஸ்ட்ராபி என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி நிவாரணம் வழங்கி வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய சிறுநீரகங்கள் குருதியில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. அதே தருணத்தில் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு விற்றமின் டி எனும் சத்து மூலம் கால்சிட்றியால் எனும் ஹோர்மோனை உற்பத்தி  செய்கிறது.

இந்த தருணத்தில் உங்களது சிறுநீரகங்கள் அதன் இயங்குத்திறனில் பாரிய பாதிப்பு ஏற்படும் போது அல்லது செயல்படாத போது இந்த தாதுக்கள் மற்றும் ஹோர்மோனின் உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக உங்களது எலும்புகளின் வலிமையில் பாதிப்பு உண்டாகி பலவீனமடைந்து எலும்பு முறிவு ஏற்படுகிறது.

நாட்பட்ட சிறுநீரக பாதிப்பின் காரணமாக ஏற்படும் ரீனல் ஓஸ்டியோடிஸ்ட்ராபி எனும் பாதிப்பு நான்கு வகையாக வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இவை ஐந்து நிலைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது. இத்தகைய பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அவர்களுடைய வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் குருதி பரிசோதனை, எலும்பு திசு பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். அத்துடன் இத்தகைய பாதிப்பின் நிலையை துல்லியமாக அவதானித்து, பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாகவும் அல்லது பிரத்யேக சத்திர சிகிச்சை மூலமாகவும் இதற்கான நிவாரணத்தை முழுமையாக வழங்குகிறார்கள்.

வைத்தியர் பிரசன்னா - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13
news-image

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-30 17:14:50
news-image

மேல் தோல் பகுதியில் உள்ள மரபணுகளின்...

2026-07-29 17:03:14
news-image

கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-07-28 17:21:34
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நியோஅட்ஜுவன்ட்...

2026-07-27 15:27:06
news-image

ஸ்கிசோஃப்ரினியா எனும் நாட்பட்ட மன சிதைவு...

2026-07-25 15:34:51