சகல தோஷங்கள் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

18 Aug, 2025 | 04:43 PM
image

எம்மில் பலரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். ஆனால் அந்த நட்சத்திரம் ஏதேனும் ஒரு தோஷத்தை பெற்றிருக்கும். இதனால் நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் இந்த பிறவியில் தோஷத்துடன் தான் பிறக்கிறீர்கள்.

இந்த தோஷத்தை விலக்குவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது குறிப்பிட்ட திகதியில் நதியில் நீராடி ஜீவசமாதி அடைந்த சித்தர்களை வழிபடுவது.‌

இதற்கான தருணம் இந்த ஆவணி மாதத்தில் அமையப்பெற்றிருக்கிறது என்பதையும் அதனை பலரும் பாவித்து தோஷத்திலிருந்து விலகி இந்த பிறவியில் நீங்கள் பெறவேண்டிய சுகப்பலன்களை பெறுவதற்கு உதவும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அஸ்வினி நட்சத்திரம் முதல் மிருகசீரிஷம் வரை ஆயுள் தோஷம் உண்டு என்பதும், மிருகசீரீஷம் நட்சத்திரம் முதல் பூரம் நட்சத்திரம் வரை திதி தோஷம் உண்டு என்பதும், பூரம் நட்சத்திரம் முதல் விசாகம் நட்சத்திரம் வரை நட்சத்திர தோஷம் உண்டு என்பதும், விசாகம் நட்சத்திரம் முதல் உத்திராடம் வரை யோக தோஷம் உண்டு என்பதும், உத்திராடம் நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திர வரை கரண தோஷம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே தருணத்தில் ஆயுள் தோஷம் - திதி தோஷம் - நட்சத்திர தோஷம் - கரண தோஷம் ஆகிய தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அரச மர நிழல் விழும் ஓடும் நதியில் நீராடி, அருகில் ஜீவசமாதி அடைந்த சித்தரை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

இந்நிலையில்  ஆவணி மாதம் ஐந்தாம் திகதியன்று (  ஓகஸ்ட் 21 ஆம் திகதியன்று)  வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் இணைந்து வருகிறது.  இந்த நாளில் சூரிய உதயத்திற்கு பிறகு அரச மர நிழல் விழும் நதியில் நீராடி , புத்தாடை அணிந்து,  இறைவனை வழிபட்டால்..( அருகில் இருக்கும் ஜீவ சமாதியை வழிபட்டால்)  உங்களுடைய கர்ம தோஷம் விலகும்.‌

குறிப்பு : இது தேய்பிறையில் வருவதால் வளர்பிறையில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் தோஷம் முழுமையாக விலகும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30