வெளிவிவகார அமைச்சரிடம் தனது தகுதிச் சான்றுகளைச் சமர்ப்பித்தார் இலங்கைக்கான WFP யின் புதிய பிரதிநிதி, வதிவிட பணிப்பாளர்

18 Aug, 2025 | 05:24 PM
image

கொழும்பு – ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) யின் இலங்கைக்கான புதிய பிரதிநிதி மற்றும் வதிவிட பணிப்பாளர்  பிலிப் வார்ட், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், தனது தகுதிச் சான்றுகளை, அமைச்சின் அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பித்தார். 

அமைச்சர்  ஹேரத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இலங்கையின் உணவு முறைகளை வலுப்படுத்துதல், போஷாக்கை மேம்படுத்துதல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரிடையே தாக்குப் பிடிக்கும் ஆற்றலை உருவாக்குதல் போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உலக உணவுத் திட்டத்தின் உறுதிப்பாட்டை வார்ட் மீண்டும் உறுதிப்படுத்தினார். 

இலங்கையானது, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின் முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான சவால்களைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன் என்று வதிவிட பணிப்பாளர் தவார்ட் கூறினார். 

மேலும், தேசிய முயற்சிகளுக்கு WFP தனது ஆதரவில் உறுதியாக உள்ளது, குறிப்பாக மிகவும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு சத்தான உணவை அணுகுவதை உறுதி செய்வதற்காக கூட்டாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வதிவிட பணிப்பாளர் வார்ட் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோர் உலக உணவுத் திட்டத்தின் நாட்டுக்கான மூலோபாயத் திட்டம், இலங்கையின் போசாக்கின்மையைக் குறைத்தல் மற்றும் காலநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் முகப்பில் சமூகத்தின் தாக்குப் பிடிக்கும் ஆற்றலை வலுப்படுத்துதல் குறித்து கலந்துரையாடினர். 

மீட்சியின் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையின் பாதையில் யாரும் பின்தங்கிவிடாமல் இருக்க, ஒரு நம்பிக்கைக்குரிய பங்காளியாக உலக உணவுத் திட்டத்தின் பங்கை திரு. வார்ட் வலியுறுத்தினார்.

பிலிப் வார்ட், மனிதாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளில் உலக உணவுத் திட்டத்துடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர். இதில் அவசரகால மற்றும் மூலோபாயச் சூழல்களில் மூத்த தலைமைப் பதவிகளும் அடங்கும். மிக அண்மையில், அவர் ரோமில் உள்ள நிர்வாகச் சபையின் செயலாளராகவும், நிர்வாகச் சபையின் செயலகப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

 அங்கு உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பின் நிர்வாகத்திற்கு வசதியளிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். களச் செயற்பாடுகள், மூலோபாயப் பங்காளர் மற்றும் நிறுவனத் தலைமை ஆகிய இரண்டிலும் வலுவான பின்னணியைக் கொண்ட  வார்ட், புதுப்பிக்கப்பட்ட கவனம் மற்றும் பார்வையுடன் இலங்கையில் உலக உணவுத் திட்டத்தின் முயற்சிகளை வழிநடத்த நல்ல நிலையில் உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:02:32
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00