நானூறு கோடி ரூபாய் வசூலை எட்டிய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கூலி'

18 Aug, 2025 | 02:45 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம் முதல் நாளன்று இந்திய மதிப்பில் 151 கோடி ரூபாய் வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 

இதைத் தொடர்ந்து' கூலி ' திரைப்படம் - வெளியான நான்கு நாட்களில் இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டது என திரையுலக வணிகர்கள் தரவுகளின் அடிப்படையில் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-  லோகேஷ் கனகராஜ் - சத்யராஜ் - அமீர்கான் - நாகார்ஜுனா - சௌபின் சாகிர் - உபேந்திரா - சுருதிஹாசன் ஆகியோரின் கூட்டணியில் உருவான 'கூலி ' திரைப்படம் - பாரிய அதிர்வை ரசிகர்களிடம் அலையாக உருவாக்கவில்லை என்றாலும்.. கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்தத் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கக்கூடும் என்றும்,  உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை கடந்து 408 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும் என்றும் திரையுலக வணிகர்கள் தரவுகளின் அடிப்படையில் உறுதிபட தெரிவிக்கிறார்கள். 

ஆனால் இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வசூல் விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்