வடக்கில் ஹர்த்தால் ! - இயல்பு நிலை எவ்வாறு ?

18 Aug, 2025 | 01:54 PM
image

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி தமிழரசு கட்சியினால், பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வடக்கின் சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும், பெருமளவான இடங்களில் இயல்பு நிலை சுமுகமாக காணப்பட்டது.

முத்தையன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், அதனால் இராணுவத்தினரை வெளியற்றுமாறு கோரி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 

முன்னதாக 15ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மன்னார் மடு தேவாலய பெருநாள் என்பதால், 18ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது. 

கதவடைப்பு போராட்டத்திற்கு தம்முடன் கலந்து ஆலோசிக்கவில்லை என வர்த்தக சங்கங்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பொது அமைப்புகள் குற்றம் சாட்டி, போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தன. 

இந்நிலையில் திங்கட்கிழமை (18)  காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது. 

அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன், அரச திணைக்களங்கள், பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் திங்கட்கிழமை (18) கதவடைப்புக்கு ஆதரவு வழங்கப்படவில்லை என்பதுடன் நகரத்தின் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கதவடைப்பு  போராட்டம் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை.  குறிப்பாக பொதுச்சந்தை மற்றும் நகர வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துகள் வங்கி செயற்பாடுகள் அனைத்துமே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வவுனியா

வடகிழக்கு தழுவிய ரீதியில் இன்று கர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்  வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் காணப்படுவதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்தன. 

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (18) கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர். நகரத்தில் அநேக வர்த்தகநிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன. 

பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல உள்ளன.  

இதேவேளை, கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தன. 

இதேவேளை பழைய பேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபார நிலையங்களில் குறிபிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன. 

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததுடன், சில வர்த்தக நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை தெரிவித்து பூட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைதீவு 

முல்லைதீவில் ஹர்த்தாலால் திங்கட்கிழமை (18) வர்த்தக நிலையங்கள் மூடப்படதுடன், தனியார் பொதுப்போக்குவரத்தும் முடங்கியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக பணியாளர் ஆட்சேர்ப்பை மாதாந்தம் மீளாய்வு...

2026-09-07 12:16:09
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும்...

2026-09-07 19:12:32
news-image

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப்...

2026-09-07 19:08:28
news-image

போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி...

2026-09-07 19:01:04
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை...

2026-09-07 18:57:01
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44