நல்லூர் துப்பாக்கித் தாக்குதலை கண்டித்து நாளை கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Image result for இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி virakesari

கடந்த சனிக்கிழமை யாழ்.நல்லூர் பின் வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதியின் மெய் பாதுகாப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

கிளிநொச்சி சேவை சந்தையின் அனைத்து வியாபார நிலையங்களும் நாளைய தினம் பூட்டப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் கிளிநொச்சியிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரித்துள்ளனர். அத்தோடு  தனியார் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது.