( லியோ நிரோஷ தர்ஷன் )

தமிழ் மக்கள் பேரவை தொடரிபில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு யாழில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்மக்கள் பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.