கடனை எந்த கிழமையில் திருப்பி செலுத்த கூடாது..?

16 Aug, 2025 | 05:47 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய மக்களுக்கு இந்தந்த கிழமையில் ..இந்தந்த சுப நிகழ்வுகளை நடத்துங்கள்.. என்று பரிந்துரை செய்தால்.. அதற்கு மாற்று என்ன? என்று கேட்பார்கள்.

அதே தருணத்தில் எந்தெந்த கிழமையில் எதனை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினால்.. அதற்கும் மாற்று என்ன? என்று கேட்பார்கள் அல்லது செய்தால் என்ன ஆகும்? என்று குதர்க்கம் பேசுவார்கள்.

இதனால் தான் எம்முடைய முன்னோர்கள் வாரத்தில் உள்ள ஒவ்வொரு கிழமைகளிலும் இதனை செய்யலாம் என்று பல விடயங்களை பட்டியலிடுவதை விட.. இதை கவனமாக தவிருங்கள் என்று ஒரு பட்டியலை வழங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதனை ஆயுள் முழுவதும் கடைப்பிடிக்க தொடங்கினால் செல்வ வளம் மேம்படுவதுடன் மன மகிழ்ச்சியும், மன அமைதியும் அதிகரிக்கும்.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் அல்லது வீட்டின் இல்லத்தரசியின் நெருக்கடியால் ஷொப்பிங் செய்கிறேன் என்று சுப்பர் மார்க்கெட் சென்று.. இரும்பு சம்பந்தமான பொருட்களை.. அவை சிறிதாக இருந்தாலும் வாங்கினால்..அன்றுடன் உங்களின் வளர்ச்சி நின்றுவிடும். ஜாக்கிரதை.

திங்கட்கிழமை உங்களுடைய உறவினரோ அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரோ எதிர்பாராத விதமாகவோ அல்லது இயற்கையான முறையிலோ மரணத்தை எதிர்கொண்டால்.. நீங்கள் சென்று மலர் மாலை சாற்றி அஞ்சலி செலுத்தி விட்டு வந்து விடுங்கள். எக்காரணம் கொண்டும் அன்று இரவு அந்த வீட்டில் நீங்கள் தங்கினால்... உங்களுடைய வளர்ச்சி நின்றுவிடும். எச்சரிக்கை.

செவ்வாய்க்கிழமையில் உங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளையும் அல்லது கை விரல்களில் அணிந்திருக்கும் மோதிரத்தையோ அல்லது கைகளில் அணிந்து இருக்கும் பிரேஸ்லெட் எனும் தங்க அணிகலன்களையோ எந்த காரணம் முன்னிட்டும் கழட்டி அடகு கடைக்கோ அல்லது யாருக்கேனும் இரவலாகவோ வழங்கி விட வேண்டாம். அதையும் கடந்து வழங்கினால் உங்களுடைய வளர்ச்சி அவ்வளவுதான்.

அன்று மாலை ஏதேனும் விருந்து நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழட்டி அதனை சுத்திகரித்தாலும் கூட உங்களை தரித்திரம் அண்டும்.

புதன் கிழமைகளில் கண் பார்வை திறன் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவோ அது தொடர்பான வைத்தியர்களை சந்தித்து சத்திர சிகிச்சை அல்லது மருந்தியல் சிகிச்சையை பெறவோ கூடாது. அதையும் கடந்து வேறு வழி இல்லாமல் அன்று சிகிச்சையை மேற்கொண்டால் பார்வைத் திறன் முழுவதுமாக மீள்வதில் பாரிய சிக்கல் எழும்.

வியாழக்கிழமைகளில் பெருமாளை வணங்குபவர்களும், வீட்டில் மாடம் அமைத்து துளசி செடியை வளர்ப்பவர்களும் அசைவத்தை சாப்பிடக் கூடாது. அதையும் மறந்து அசைவத்தை சிறிதளவு சாப்பிட்டாலும் அதனால் எதிர் மறை ஆற்றல் உங்களை ஆக்கிரமித்துக் கொண்டு வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்தும்.

வெள்ளிக்கிழமைகளில் எக்காரணம் கொண்டும் கடனை திரும்ப செலுத்த வேண்டாம். உடனே எம்மில் சிலர் மாதாமாதம் 10 ஆம் திகதியன்று நாங்கள் கடனை செலுத்த வேண்டும்.

அன்று வெள்ளிக்கிழமை வந்தால் என்ன செய்வது? தவிர்க்க  இயலாதே! என்பர். இது போன்ற தருணங்களில் ஒரு நாள் முன்னதாகவோ அல்லது ஒரு நாள் பின்போ கடனை செலுத்துவது தான் உத்தமமான வழி.

இது தொடர்பான பேச்சு வார்த்தையை நடத்தி தீர்வு காணுங்கள். இது எல்லாம் சும்மா என்று நீங்கள் கருதினால்.. உங்களால் கடனை முழுவதுமாக செலுத்த இயலாத நிலை உருவாகும்.

சனிக்கிழமைகளில் எக்காரணம் கொண்டும் சிறிய அளவிலாவது கடனை வாங்கி விட வேண்டாம். அதையும் மீறி சூழல்கரணமாக நீங்கள் வாங்கி விட்டால் ஆயுள் முழுவதும் கடனாளியாகி விடுவதுடன் கடனுக்கான வட்டியை செலுத்தி செலுத்தி உங்களுடைய மன நிம்மதியும், மன அமைதியும் குலையும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29
news-image

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட மேற்கொள்ள வேண்டிய...

2026-07-04 13:42:37