அட்டன் நகரில் எதிர்காலத்தில் இனி புதிய மதுபானசாலைகளை அனுமதிப்பதில்லையென அட்டன் - டிக்கோயா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் சபை வெள்ளிக்கிழமை (15) கூடியபோது, தீர்மானம் ஒன்றை முன்வைத்த சுயேச்சை குழு உறுப்பினர் எஸ்.கேசவமூர்த்தியின் கோரிக்கையை சபைத்தலைவர் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக மனதாக வரவேற்றனர்.
இங்கு உரையாற்றிய உறுப்பினர் கேசவமூர்த்தி, 'அட்டன் நகரை ஆக்கிரமித்து வரும் மதுபானசாலைகள்' என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) அன்று வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமான ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தனது உரையை நிகழ்த்தினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், அண்மையில் வீரகேசரி பத்திரிகை தனது 95 ஆவது அகவையைக் கொண்டாடியது. இது தமிழ் பேசும் மக்களுக்கு கெளரவமாகும்.
அப்பத்திரிகை நிறுவனம் நூற்றாண்டை கொண்டாட இச்சபை உறுப்பினர்கள் அனைவரினதும் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அட்டன் நகரை மையமாகக் கொண்டு 'அட்டன்- 2040' என்ற தொனிப் பொருளில் வீரகேசரி தொடர் ஒன்றை ஆரம்பித்திருந்தது. தேசிய மக்கள் சக்தியானது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அட்டன் பிரகடனத்தை அட்டனில் வைத்தே வெளியிட்டது.
இத்தகைய வரலாற்று சிறப்பு கொண்ட அட்டன் நகரில் மதுபானசாலைகளின் ஆக்கிரமிப்பை தே.ம.ச வரவேற்கின்றதா? வீரகேசரி பத்திரிகையும் கடந்த வாரம் இது குறித்து ஆக்கம் ஒன்றை பிரசுரித்திருந்தது.
அந்த நிறுவனம் எதிர்ப்பார்க்கும் அழகிய அட்டன் நகரம் நிறுவனத்தின் நூற்றாண்டிலாவது நிறைவேற வேண்டும். ஆனால் நாம் எமது நகரை மதுபானசாலைகள் மூலமாகவா அழகுபடுத்தப் போகின்றோம்?
மதுபானசாலைகளை ஒழிப்போம் என்று கோஷமிட்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்ததன் பின்னர் அட்டன் நகரில் இரண்டு மதுபானகடைகள் திறக்கப்பட்டுள்ளன.
புதிதாக ஒன்று திறக்கப்பட கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. ஆகவே எதிர்காலத்தில் அட்டன் நகரில் புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பிரேரணையை சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
நகர சபைத்தலைவர் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இக்கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக கூறியதையடுத்து இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானமானது நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என சபைத்தலைவரால் கூறப்பட்டது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM