பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் வெள்ளிக்கிழமை (15) காலமானார். அவருக்கு வயது 80.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த 8ம் தேதி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இல.கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (ஆக.15) மாலை 6;23 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கண்ணந்தங்குடி கிராமத்தில் 1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி பிறந்த இவர், தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார்.
2021ம் ஆண்டில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM