புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் ' பேய் கதை' படத்தின் இசை - முன்னோட்டம் வெளியீடு

15 Aug, 2025 | 03:21 PM
image

அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' பேய் கதை' எனும் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜுன் மோசஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' பேய் கதை'  எனும் திரைப்படத்தில் வினோத், ஆரிய லக்ஷ்மி,  கானா பல்லவ், சுகன்யா , செல்வா,  எலிசபெத் சுராஜ்,  ஜீ.வி மகா , மைக்கேல், ஸ்ரீ சுமந்த் , ஆசிக் பீட்டர் , ரோடஸ் , ஜீவிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார்.

திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெர்ரி'ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெர்ரி தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'பேய் கதை' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.‌

இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், '' பேய் கதை திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம்.

எட்டு நிமிட அளவிற்கு வி.ஆர். மோசன் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கிறது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51